எழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020

தினமலர்  தினமலர்
எழுச்சி பெறுவாரா ரிஷாப்: முகமது கைப் நம்பிக்கை | ஜூலை 14, 2020

புதுடில்லி:  ‛‛அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரராக ரிஷாப் பன்ட் எழுச்சி காண்பார்,’’ என, முகமது கைப் தெரிவித்துள்ளார்.

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷாப் பன்ட் 22. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், இதுவரை 13 டெஸ்ட் (814 ரன்), 16 ஒருநாள் (374), 28 சர்வதேச ‛டுவென்டி-20’ (410) போட்டிகளில் விளையாடி உள்ளார். தவிர ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடருக்கு துவக்கத்தில் தேர்வு செய்யப்படாத இவர், ஷிகர் தவான் காயத்தால் விலகியதால் வாய்ப்பு பெற்றார்.

இதுகுறித்து டில்லி அணியின் துணை பயிற்சியாளர் முகமது கைப் கூறியது: ரிஷாப் பன்ட் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். கடந்த ஆண்டு உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அப்போது அவரிடம், ‛இளம் வீரரான உங்களது திறமை அனைவருக்கும் நன்றாக தெரியும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே, போட்டியில் கவனம் செலுத்துங்கள்,’ என்று ஆலோசனை வழங்கினோம். இளம் வீரரான இவர், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருவார். இதற்கான தகுதி அவரிடம் உண்டு.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரிஷாப் பன்ட்டுக்கு ஏற்ற சரியான இடம் கண்டறியப்படவில்லை. துவக்கத்தில் இருந்து அதிரடியாக ரன் சேர்க்கும் திறமை கொண்டுள்ள இவரை டில்லி அணி சார்பில் கடைசி 10 ஓவரில் களமிறக்க முடிவு செய்துள்ளோம். இவர் சிறந்த ‛பினிஷராக’ ஜொலிப்பார்.

இவ்வாறு கைப் கூறினார்.

மூலக்கதை